தியாகதுருகம், தியாகதுருகம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில், விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று துறை இயக்குனர் சுப்பையா ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின் போது, விதை இருப்பு ஆய்வு, விதை முளைப்புத் திறன் பரிசோதனை, பதிவேடுகள் ஆகியவற்றை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.தொடர்ந்து, அங்கக முறையில் விதை உற்பத்தி செய்த விவசாயிக்கு அங்ககச் சான்று வழங்கப்பட்டது. விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை இணை இயக்குனர் ஆஸ்டின் கனகராஜ், வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி, துணை இயக்குனர் (திட்டம்) சுந்தரம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன் மற்றும் உடனிருந்தனர்.