குறைகேட்புக் கூட்டத்திற்கு வராத அதிகாரிகளால் சப் கலெக்டர்... எரிச்சல்: பதவிக்கு மரியாதை அளித்து கூட வரவில்லையே என வேதனை
Added : மே 19, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


திண்டிவனம், :ண்டிவனத்தில் நடந்த விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்திற்கு பதில் அளிக்கக் கூடிய துறை அதிகாரிகள் வராததால் சப் கலெக்டர் எரிச்சல் அடைந்தார்.திண்டிவனம், சப் கலெக்டர் அலுவலகத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. சப் கலெக்டர் அமித் தலைமை தாங்கினார். தாசில்தார் வசந்தகிருஷ்ணன், வேளாண் உதவி இயக்குனர்கள் சரவணன், சுரேஷ் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.கூட்டம் துவங்கியதும், விவசாயிகள் பலர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கடந்த கூட்டத்திற்கும் வரவில்லை. இந்த கூட்டத்திற்கும் வரவில்லை என புகார் தெரிவித்தனர்.கூட்டத்திற்கு பதில் அளிக்கக் கூடிய அதிகாரிகள் வராமல், துணை அதிகாரிகள் வந்திருப்பதை அறிந்த சப் கலெக்டர் எரிச்சல் அடைந்தார்.பின், அவர் பேசுகையில், 'கூட்டத்தில் விவசாயிகளுக்கு பதில் கூற வேண்டிய துறை அதிகாரிகள் வரவேண்டும் என கடந்த கூட்டத்திலேயே கூறினேன். ஆனால், இந்த கூட்டத்திற்கு பல பி.டி.ஓ.,க்கள் வரவில்லை. என்னுடைய பதவிக்கு மரியாதை அளித்து கூட வரவில்லை. என்னுடைய மூடை ஸ்பாயில் செய்யாதீர்கள்.வராத அதிகாரிகள் குறித்து நான் கலெக்டருக்கு புகார் அனுப்பினால், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு ஏற்படும்' என்றார்.தொடர்ந்து விவசாயிகள் தரப்பில் பேசியதாவது:கூட்டம் நடத்துவதற்கு இடம் போதவில்லை. விவசாயிகள் பலர் வெளியே நிற்கின்றனர். அடுத்த முறை பெரிய அரங்கில் கூட்டம் நடத்த வேண்டும். உரம் விற்பனை நிலையங்களில், விவசாயிகளின் தேவைக்கேற்ப உரங்கள் வழங்கப்படாமல், வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் உரங்கள் வழங்கப்படுகிறது.கிராமங்களில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் பாதிப்பு அதிகம் உள்ளதால், கால்நடை சிறப்பு முகாம்கள் நடத்தி தடுப்பூசி போட வேண்டும். பட்டா மாற்றம் செய்ய காலதாமதம் ஏற்படுகிறது.நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் பதிவில் கூறப்பட்ட தேதியில் சென்றால், நெல் கொள்முதல் செய்வதில்லை. நுகர்பொருள் வாணிப கழக குடோனில் நெல் மூட்டைகள் வைப்பதற்கு இடம் இல்லாததால், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யாமல், விவசாயிகளை திருப்பி அனுப்புகின்றனர்.சத்தியமங்கலம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் உட்பட பல இடங்களில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்குவதில்லை.திண்டிவனம் மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகள் விற்பனை செய்யும் பொருட்களுக்கு பணம் உடனே வழங்காமல் நீண்ட நாட்களாக நிலுவை வைத்துள்ளனர் என புகார் தெரிவித்தனர்.


 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X