திருவெண்ணெய்நல்லுார், 'தினமலர்' செய்தி எதிரொலியால் புதிய பஸ் நிலைய வணிக வளாக கட்டடம் திறப்பு விழா நாளை நடக்கிறது.திருவெண்ணெய்நல்லுாரில், பழுதடைந்த பஸ் நிலையத்தின் ஒரு பகுதியை இடித்து அகற்றிவிட்டு 2020- 2021ம் ஆண்டு மூலதன மானிய திட்டத்தின் கீழ் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக கடைகள் மற்றும் ஒரு தாய்மார்கள் பாலுாட்டும் அறையுடன் கூடிய புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டது.கட்டி முடிக்கப்பட்டு 4 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் திறப்பு விழா காணாமல் உள்ளது. இது தொடர்பாக 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.அதனைத் தொடர்ந்து புதிய பஸ் நிலைய வணிக வளாக கட்டடத்தை அமைச்சர் பொன்முடி நாளை 20ம் தேதி திறந்து வைக்கிறார்.