சிறுமியரின் ஆபாச படம் பகிர்ந்த மாணவர் கைது
Added : மே 19, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

சென்னை: இணையத்தில் சிறுமியரின் ஆபாச படம் பார்த்து அதை சமூகவலைதளத்தில் நண்பர்களுக்கு பகிர்ந்த கல்லுாரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.


அமெரிக்காவில் செயல்படும் தனியார் தொண்டு நிறுவன நிர்வாகிகள் மத்திய அரசுக்கு இ - மெயில் வாயிலாக புகார் ஒன்றை அனுப்பினர். அதில் சென்னையைச் சேர்ந்த நபர் ஒருவர் இணையதளத்தில் சிறுமியரின் ஆபாச படங்களை பார்த்து அதை பதிவிறக்கம் செய்து சமூக வலைதளம் வாயிலாக நண்பர்களுக்கு அனுப்புவதாக தெரிவித்தனர். இந்த புகார் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தினர். மேல் விசாரணைக்காக இப்புகார் வேப்பேரி மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. விசாரணையில் சூளை பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் 18 என்ற கல்லுாரி மாணவர் சிறுமியரின் ஆபாச படங்களை இணையத்தில் பார்ப்பதும் அதை சமூகவலைதளம் வாயிலாக நண்பர்களுக்கு பகிர்ந்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து சந்தோஷ்குமார் நேற்று கைது செய்யப்பட்டார். அவரின் நண்பர்கள் குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X