வளர்க்கப்படுமா? கல்வராயன்மலையில் மீண்டும் சந்தன மரங்கள்...!
Added : மே 19, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக கல்வராயன்மலை உள்ளது. இது கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மேற்கு எல்லையாக அமைந்துள்ளது. இம்மலைகள் சின்ன கல்வராயன்மலை, பெரிய கல்வராயன்மலை என 1,095 சதுர கி.மீ., பரப்பில் 2,000 முதல் 3,000 அடி வரை உள்ளது.

சந்தன மரம் வளர்வதற்கு ஏற்ற சூழல் இங்கு நிலவுவதால் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் வரை இம்மலை சந்தனக்காடாக இருந்தது. சமூக விரோத கும்பலின் அத்து மீறல் மற்றும் சில அதிகாரிகளின் மெத்தனத்தால் சந்தன மரக் கடத்தல் கொடி கட்டி பறந்தது.இதன் காரணமாக கல்வராயன்மலையில் தற்போது சந்தனமரம் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டது.

சமீபகாலமாக காடுகளில் புதிய சந்தன செடிகள் எதுவும் வளர்வதில்லை. அதையும் மீறி வளரும் மரங்களை சமூக விரோதிகள் அடியோடு வெட்டி எடுத்துச் சென்று விடுகின்றனர். இதற்கு சில உள்ளூர் வன அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர்.தற்போது, மலையில் உள்ள வனத்துறை அலுவலக வளாகத்தில் மட்டுமே சில சந்தன மரங்கள் சாம்பிளுக்கு வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2002ம் ஆண்டு சந்தன மரம் வளர்ப்பதில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்தது.இதன் மூலம் தனிநபர் சந்தன மரங்களை வளர்க்க அனுமதி அளிக்கப்பட்டது. வளர்ந்த மரங்களை விற்பனை செய்வதற்கு கட்டுப்பாடுகள் உள்ளது. இதனை வளர்ப்பவர்களுக்கு சமூக விரோத கும்பலால் பல்வேறு தொந்தரவுகள் ஏற்பட்டதால் இப்பகுதியில் யாரும் ஆர்வம் காட்டுவதில்லை.இம்மரங்கள் 40 முதல் 50 அடி உயரமும் இரண்டரை மீட்டர் சுற்றளவு வளரக் கூடியது. 20 ஆண்டுகள் வளர்ந்த மரத்திலிருந்து தரமான சந்தனத்தை பெற முடியும்.இதிலிருந்து பெறப்படும் சந்தனம் மற்றும் எண்ணெய்க்கு சர்வதேச அளவில் நல்ல விலை கிடைக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக கல்வராயன்மலையில் உள்ள வனப்பகுதியை அப்பகுதி மக்கள் ஆக்கிரமித்து காடுகளை அழித்து விளை நிலங்களாக மாற்றி வருகின்றனர். இதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறை அதிகாரிகள் திண்டாடி வருகின்றனர்.இதனால் காட்டின் வளம் அழிக்கப்படுவதோடு காப்புக் காடுகளின் பரப்பு சுருங்கி வருகிறது.
அதேபோல் கள்ளச்சாராய உற்பத்தியும் கல்வராயன் மலையில் கட்டுப்படுத்த முடியாத மிகப்பெரிய சவாலாக உள்ளது.இச்சூழ்நிலையில் கல்வராயன் மலையில் சந்தன மரங்களை வளர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதன் மூலம் அப்பகுதி முழுதும் அதிகாரிகளின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும்.
தற்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியைக் கொண்டு மலையின் அனைத்து பகுதியையும் முழுமையான கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வர முடியும். இதனால், கள்ளச்சாராயம் ஊறல் போடுவது, காய்ச்சுவதும் தவிர்க்கப்படும்.சந்தனமர நாற்றுகளை நட்டு வளர்ப்பதன் மூலம் ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்க முடியும். மரங்களை பராமரிக்கவும் பாதுகாக்கவும் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பை தர முடியும். இதன் மூலம் அரசு மிகப்பெரிய அந்நியச் செலாவணி ஈட்ட வாய்ப்புள்ளது.
முறையான திட்டமிடல் மூலம் வனத்துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து அரசு இதற்கான நிதியை ஒதுக்கி நடைமுறைப்படுத்தினால் கல்வராயன் மலையில் மீண்டும் சந்தனம் கமழும் என்பது நிதர்சனமான உண்மை.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X