கோவை : கோவையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தொழில் துறையினரிடம் கலந்துரையாடுகிறார்.
அப்போது அவர் பேசுகையில், ''ஒட்டுமொத்த தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கான தேவை என்ன, தொழில்துறையில் நீடிக்கும் பிரச்னைகள் என்ன அதற்கான தீர்வு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும். உங்கள் தேவைகளையும், வேண்டுகோள்களையும் அரசு ஏற்றுக்கொண்டு அதற்கான தீர்வுகளின் அடிப்படையில் புதிய அறிவிப்புகளை முதல்வர் நாளை (இன்று) வெளியிடுவார்,'' என்றார்.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த தொழில்துறையினர், கொடிசியா, சீமா, சிஸ்பா,சைமா, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், பின்னலாடை, விசைத்தறி உரிமையாளர்கள் உள்ளிட்ட பல அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பேசினர். கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.