பீடி தொழிலாளர்களுக்கு கூடுதல் கூலி நிர்ணயம்
Added : மே 19, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



ஈரோடு : ஈரோடு மாவட்ட பீடி தொழிலாளர்களுக்கு, மற்ற மாவட்டங்களை விட கூடுதலாக கூலி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



தமிழக பீடி தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பான முத்தரப்பு பேச்சு, சென்னையில் நடந்தது. இது பற்றி, தமிழ்நாடு பீடி, சுருட்டு மற்றும் புகையிலை தொழிலாளர் சம்மேளன பொருளாளர் ஈரோட்டை சேர்ந்த சின்னசாமி கூறியதாவது:

தமிழகத்தில், பீடி தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் காலாவதியாகி விட்டது. புதிய ஊதிய ஒப்பந்தத்தை முடிவு செய்ய, முத்தரப்பு கூட்டம், மாநில தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில், தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் தலைமையில் நடந்தது.தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கும் தற்போது வழங்கப்பட்டு வரும் அடிப்படை கூலி, மே 10 முதல், 1,000 பீடிகளுக்கு, 13 ரூபாய் வீதம் உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தப்படி, 1,000 பீடி சுற்றுவதற்கு அடிப்படை சம்பளமாக, 119.80 ரூபாய், அகவிலைப்படி, 128.01 ரூபாய் என, 247.81 ரூபாய் வழங்கப்படும்.இதில், ஈரோடு மாவட்டத்தில் மட்டும், 8.05 ரூபாய் கூடுதலாக வழங்கப்படும். இதன்படி ஈரோடு மாவட்டத்தில், 1,000 பீடிகளுக்கு, 255.86 ரூபாய் வழங்கப்படும்.இந்த ஒப்பந்தம் மூலம் தமிழகத்தில், ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயன் பெறுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X