இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாநகராட்சி மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே, மெட்ரோ ரயில் நிலையம், அதன் கீழ் சுரங்கப்பாதை பணிகள் நடைபெற உள்ளது. இந்த பணிகளின் போது, சிலை சேதமடைவதை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிலையை மாற்றி வைக்க திட்டமிட்டுள்ளோம்.
அதன்படி, மெட்ரோ ரயில் பணிகள் முடியும் வரை, வரலாற்று சிறப்பு மிக்க மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தின் நுழை வாயில் பகுதியில், காந்தி சிலை மாற்றி வைக்கப்படும்.மெட்ரோ ரயில் பணிகள் முடிந்தப்பின் மீண்டும், மெரினா கடற்கரைக்கு காந்தி சிலை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.