சென்னை : நங்கநல்லுார் ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் கோவில், ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மஹா சம்ப்ரோக்ஷணம் எனப்படும் கும்பாபிஷேகம் இன்று காலை நடக்கிறது.
சென்னை, நங்கநல்லுார் ராம்நகரில், ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் நிர்மாணிக்கப்பட்டு, கடந்த, 1995ம் ஆண்டு அஷ்டபந்தன மஹா சம்ரோக்ஷணம் நடந்தது. இக்கோவிலில் கோதண்ட ராமர், வேணுகோபால சுவாமிகளுக்கு தனி சன்னிதிகள் உள்ளன. கடந்த, 2007ம் ஆண்டு சம்ப்ரோக்ஷணம் நடந்தது.
அதன் பின், இன்று சம்ப்ரோக்ஷணம் எனப்படும் மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்காக, மூலஸ்தான பாலாலயம் கடந்த மாதம், 25ம் தேதி நடந்தது. கும்பாபிஷேக நாளான இன்று காலை 5:00 மணி முதல் சுப்ரபாதம், விஸ்வரூபம், புண்யாஹவசனம், காலசந்தி, திருவாராதனம், பிரதான ஹோமம், மஹா பூர்ணாஹுதி ஆகியவை நடக்கிறது.காலை 8:00 மணி முதல், 9:30 மணிக்குள் கடப்புறப்பாடு நடந்து, கோபுர கலசங்களுக்கு கும்ப நீர் சேர்த்து, ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா சம்ப்ரோக்ஷணம் நடக்க உள்ளது.