'டூ - வீலர்'களுக்கு தனி வழி திட்டம்; பைபாஸ் சாலையில் தாமதம்
Added : மே 19, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

சென்னை : சென்னை பைபாஸ் சாலையில், இருசக்கர வாகனங்களுக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம், கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

பெருங்களத்துார் - புழல் இடையிலான சென்னை பைபாஸ் சாலை, 32 கி.மீ., நீளம் உடையது. சென்னை - திருச்சி, சென்னை - பெங்களூரு, சென்னை - திருப்பதி, சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில், இச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் போக்குவரத்திற்காக, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் இது உருவாக்கப்பட்டது. ஆனால், தற்போது அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள், கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் மட்டுமின்றி, இருசக்கர வாகனங்களும், இச்சாலையில் அதிகளவில் செல்கின்றன.

குறிப்பாக, பெருங்களத்துார் முதல், நொளம்பூர் மேம்பால சர்வீஸ் சாலை வரை, 24 மணி நேரமும் இருசக்கர வாகனங்களின் போக்குவரத்து உள்ளது. இச்சாலையில், மின்விளக்குகளும் இதுவரை அமைக்கப்படவில்லை. இச்சாலையில் அடிக்கடி இருசக்கர வாகன விபத்து மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், இருசக்கர வாகனங்களுக்கு தனி வழி ஏற்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின், தமிழக பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டனர்.

இதற்காக, திட்ட மதிப்பீட்டை தயாரித்து, டில்லியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணைய தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். இரண்டு ஆண்டுகள் ஆகியும், இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால், இருசக்கர வாகனங்களுக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம் கிடப்பில் வைக்கப்பட்டு உள்ளது.சென்னை பைபாஸ் சாலையில் ஏற்படும் விபத்து மற்றும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில், இத்திட்டத்தை செயல்படுத்த விரைந்து நிதி ஒதுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X