விருதுநகர், :கலெக்டர் மேகநாதரெட்டி கூறியதாவது: இந்திய விமான படை பிரிவில் ஏர்மேன் பணிக்கு நேரடி ஆள்சேர்ப்பு மூலம் தகுதியானர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.முன்பதிவு அவசியம். 17 முதல் 21 வயது வரை ஆண்கள் மட்டும் கலந்து கொள்ள வேண்டும். 10. பிளஸ் 2, டிப்ளமோ தேர்வுகளில் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் இதில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு https://airmenselection.cdac.in/ என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம், என்றார்.