ஸ்ரீவில்லிபுத்துாரில் அதிகரிக்கும் கந்துவட்டி
Added : மே 19, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

ஸ்ரீவில்லிபுத்துார், :ஸ்ரீவில்லிபுத்தூரில் வட்டிக்கு கடன் வாங்கியவர்கள் திரும்பசெலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டால், அவர்களிடம் வெற்று பத்திரங்கள், எதுவும் எழுதப்படாத புரோ நோட்டுக்களில் கையெழுத்து கேட்டு மிரட்டுவதால் கூலித் தொழிலாளர்கள் மனவேதனைக்கு ஆளாகி வருகின்றனர்.பல்வேறு சுயதொழில் செய்து வருபவர்கள், தங்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக வட்டிக்கு கடன் வாங்குகின்றனர். இதில் தினசரி கடன், வாரக்கடன், மாத கடன், 100 நாள் கடன் என பல வகைகளில் ஏராளமானவர்கள் கடன் கொடுத்து வருகின்றனர். இவர்களிடம் தங்களின் அவசர தேவைக்காக, சாலையோர தொழில் செய்பவர்கள், கூலித் தொழிலாளர்கள், சுயதொழில் செய்பவர்கள் ஓரிரு லட்சங்கள் முதல் பல லட்சங்கள் வரை கடன் வாங்கும்போது அதற்கும் அதிக வட்டி வாங்கப்படுகிறது. இதற்காக வெற்று பத்திரங்கள், எதுவும் எழுதப்படாத புரோநோட்டுகளில் கையெழுத்து பெறுகின்றனர்.இதில் முறையாக வட்டி கொடுத்து வந்தாலும், வியாபார பாதிப்பு, தொழில் மந்தம் காரணமாக வட்டி கொடுப்பது காலதாமதம் ஏற்பட்டால் அவதூறாக பேசுவது, மிரட்டுவது, வீடுகளுக்கு வந்து மரியாதை குறைவாக நடந்து கொள்வது என கடன் கொடுப்பவர்கள் நடந்து கொள்கிறார்கள். இதனால் கடன் வாங்கியவர்கள் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகி வருகின்றனர்.இதுகுறித்து போலீசில் புகார் தெரிவிக்க தொழிலாளர்கள் தயங்குகின்றனர். புகார் கொடுத்தாலும் உடனடியாக போலீசார் நடவடிக்கை எடுக்காத நிலையுள்ளது.எனவே, மாவட்ட அரசு நிர்வாகம் கந்து வட்டிக்கு கடன் கொடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X