விருதுநகர் பாலியல் வழக்கில்சிறுவர்கள் புகார் மனுக்கள் | விருதுநகர் செய்திகள் | Dinamalar
விருதுநகர் பாலியல் வழக்கில்சிறுவர்கள் புகார் மனுக்கள்
Added : மே 19, 2022 | |
Advertisement
 

விருதுநகர் :விருதுநகரில் 22 வயது இளம்பெண் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் பால் பண்ணை உரிமையாளர் ஹரிஹரன், பிரவீன், மாடசாமி, ஜீனத் அகமது ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின் குண்டர் சட்டத்தில் கைதாகி மதுரை சிறையில் உள்ளனர்.இவ்வழக்கில் தொடர்புடைய சிறுவர்கள் நான்கு பேர் ஜாமினில் வெளி வந்துள்ளனர். இதில் மூன்று சிறுவர்கள் இளம் பெண்ணுக்கு எதிராக மதுரை உயர்நீதிமன்றம் கிளை சட்டப்பணிகள் குழுவிற்கு புகார் மனுக்களை அனுப்பினர்.இம்மனுக்களை விசாரித்து பதிலளிக்கும்படி விருதுநகர் மாவட்ட போலீஸ் எஸ்.பி.க்கு சட்டப்பணிகள் குழு உத்தரவிட்டுள்ளதாக சிறுவர் தரப்பு வழக்கறிஞர் சுந்தர் தெரிவித்தார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X