குன்னுார்:அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில், 'டிபன்ஸ் பேக்டரி லேபர் யூனியன்' (டி.எப்.எல்.யூ.,) 12வது பொதுக்குழு கூட்டம் நடந்தது.
டி.எப்.எல்.யு., தலைவர் முகமது அன்சார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக எம்.இ.எஸ்., சிவிலியன் சம்மேளன பொது செயலாளர் ரங்கநாதன், நமாவட்டம் பி.எம்.எஸ்., தலைவர் தேவானந்த் பங்கேற்றனர்.பொது செயலாளர் வெங்கடேஷ்ராவ் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் பூஜா மணி வருடாந்த வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்தார். சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
அதில், தலைவராக முகமது அன்சாரி, பொது செயலாளராக வெங்கடேஸ்வர் ராவ், துணை தலைவர்களாக ரவி, கோபிநாத், அலோசியஸ், இணை செயலாளராக சிவகுமார், ஒருங்கிணைப்பு செயலாளர்களாக முரளி, ரங்கநாதன், அசோக், ஸ்ரீவத்ஸன், பொருளாளராக பூஜா மணி, அலுவலக செயலாளர்களாக உமேஷ், வெங்கடேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இணை செயலாளர் செயலாளர் சிவக்குமார் வரவேற்றார். பிரேம்குமார் நன்றி கூறினார்.