குந்தா அணைக்குள் தேங்கியுள்ள சகதி :மின் உற்பத்தியில் சிக்கல்; அகற்ற நடவடிக்கை அவசியம் | நீலகிரி செய்திகள் | Dinamalar
குந்தா அணைக்குள் தேங்கியுள்ள சகதி :மின் உற்பத்தியில் சிக்கல்; அகற்ற நடவடிக்கை அவசியம்
Added : மே 20, 2022 | |
Advertisement
 
Latest district News

ஊட்டி: மின் உற்பத்திக்கு பயன்படும் குந்தா அணைக்குள், மழையால் அடித்து வரப்பட்டு தேங்கியுள்ள விறகு மற்றும் சகதியால் அடிக்கடி மின் உற்பத்தியில் தடை ஏற்பட்டு வருகிறது.


நீலகிரி மாவட்டம், குந்தா மின் வட்டத்திற்கு உட்பட்ட குந்தா அணை, 89 அடி கொண்டதாகும். இங்கு தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மூலம், கெத்தை, பரளி, பில்லுார் ஆகிய மின்நிலையங்களுக்கு ராட்சத குழாயில் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, 455 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.

குந்தா அணை கடந்த பல ஆண்டுகளாக துார் வாரப்படாததால் அணையில் பாதி அளவுக்கு சகதி நிறைந்து அடிக்கடி மின் உற்பத்தி தடைப்படுகிறது. பருவ மழையின் போது, வனப்பகுதி, மலை காய்கறி தோட்டங்களிலிருந்து சகதியுடன் அடித்து வரப்படுகிறது.

அதில், அதிகளவில் விறகு அணைக்குள் மூழ்கி உள்ளது. சமீபத்தில் நடந்த மின்வாரிய ஆய்வு படி, அணைக்குள், 5 டன் அளவுக்கு விற்கு சிக்கியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், சகதியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை அகற்றாத காரணத்தால், அணை நீரை நம்பியுள்ள கெத்தை, பரளி, பில்லுார் ஆகிய மின்நிலையங்களில் அடிக்கடி மின்உற்பத்தி தடைபடுகிறது.

இதனால், கோடை காலத்தில் உச்சமின் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில்,'அணையின் அடிபகுதியில் தேங்கியுள்ள விறகு மற்றும் சகதியை அகற்ற அணையில் உள்ள தண்ணீர் முழுவதும் வெளியேற்ற வேண்டும். தற்போது மழை தொடர்வதால், தண்ணீரை முழுமையாக வெளியேற்ற முடியாது. பருவமழை காலம் முடிந்தால் மட்டுமே இதற்கான நடவடிக்கை எடுக்க முடியும். இது குறித்து சென்னை தலைமை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது,' என்றனர்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X