ஹெலிகாப்டர் சேவை திட்டம் என்னாச்சு?ஆட்சி மாற்றங்கள் ஏற்படும் போது ஆய்வு மட்டும் நடக்குது
Added : மே 20, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

ஊட்டி:தமிழக சுற்றுலாத்துறை சார்பில் கொண்டு வரப்பட்ட, ஊட்டிக்கான ெஹலிகாப்டர் சேவை திட்டம் கிடப்பில் போடப்பட்டதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஊட்டிக்கு ஆண்டுதோறும், 35 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு, சுற்றுலா வளர்ச்சிக்காக, பல்வேறு திட்டங்களை, மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால், கடந்த, 24 ஆண்டுகளாக, பேசப்பட்டு வரும், கோவை-- ஊட்டி ஹெலிகாப்டர் சேவையை துவங்குவதில், இழுபறி நீடிக்கிறது.
1998ல், முதன் முதலாக, ஊட்டியில் சுற்றுலா ஹெலிகாப்டர் சேவை துவங்க, மாநில அரசால் ஆலோசனை செய்யப்பட்டு, மூன்று கட்டங்களாக உயர் மட்ட கூட்டங்கள் நடத்தப்பட்டன. 2007 ஜூலை 28ல், ஊட்டி தொட்டபெட்டா, தீட்டுக்கல் ஆகிய பகுதிகளில் முதற்கட்ட ஆய்வு பணிகள் நடந்தன.

ஆய்வுக்குப்பின், ஹெலிகாப்டர் சேவையை துவங்க, டில்லியை சேர்ந்த 'பவன் ஆன்ட்ஸ்' நிறுவனத்திடம், சுற்றுலா துறை சார்பில் ஆலோசனை பெறப்பட்டது. அதே ஆண்டு, ஜூலை, 31ல், பவன் ஆன்ட்ஸ் ஹெலிகாப்டர் சர்வீஸ் நிறுவன அதிகாரிகள், கோவையில் உள்ள 'ஜே.பி. ஏவியேஷன்' நிறுவன நிர்வாகிகள் இணைந்து, ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் உள்ள ஹெலிகாப்டர் தளங்களை ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்குப்பின் அவர்கள் கூறுகையில்,'ஜம்மு காஷ்மீரில், 12 ஆயிரத்து 500 அடி உயரத்தில் உள்ள அமர்நாத் பகுதிக்கு ஹெலிகாப்டர் சென்று வரும் நிலையில், 7,500 அடி உயரமுள்ள ஊட்டிக்கு, ஹெலிகாப்டர் சேவையை எளிதாக மேற்கொள்ள முடியும். முதற்கட்டமாக ஐந்து பேர் அமரக்கூடிய ஹெலிகாப்டர்களை இயக்கலாம்,' என்றனர்.அதற்கு, அப்போதைய கலெக்டர் சந்தோஷ் மிஸ்ராவும், ஒப்புதல் அளித்து, மாநில அரசுக்கு திட்ட அறிக்கையை சமர்ப்பித்தார்.

ஆனால், அந்த திட்டம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. கடந்த, ஆட்சியின் போதும், இந்த திட்டம் குறித்து, மாநில சுற்றுலா துறை ஆய்வு செய்தது. ஆனால், செயல் வடிவம் கொடுக்கப்படவில்லை.


திட்டம் ரத்து செய்யப்படவில்லை

இதன் விபரம் அறிந்த சில அரசு அதிகாரிகள் கூறுகையில், 'நீலகிரி மாவட்டத்தில் மின் உற்பத்திக்காக, 13 அணைகள், வெடிமருந்து தொழிற்சாலை, ராணுவ மையம், புலிகள் சரணாலயம் ஆகியவை உள்ளன. இத்தகைய சூழ்நிலையில், சுற்றுலாவுக்கான ஹெலிகாப்டர் சேவை நாள்தோறும் இயக்கப்பட்டால், அவற்றுக்கான பாதுகாப்பில், அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற ஐயமும் அந்த ஆய்வில் எழுப்பப்பட்டது.

அதனால், இந்த திட்டம் ஒவ்வொரு ஆட்சி மாற்றங்களின் போதும் ஆய்வு மட்டும் செய்யப்பட்டு, கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆனால், இந்த திட்டத்தை ரத்து செய்யவில்லை,' என்றனர். மக்கள் கூறுகையில், தற்போதைய அரசு, மக்களுக்கான போக்குவரத்து வசதிகளில் பல்வேறு நவீன மாற்றங்களை கொண்டு வருகிறது. அதில், மலை மாவட்டத்துக்கான ஹெலிகாப்டர் திட்டத்தில் உள்ள சாதக; பாதகங்களை ஆராய்ந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X