கூடலுார், மே 20- -
கூடலுார் நகராட்சியில், குடிநீர் சப்ளை செய்யும் மின் மோட்டார்கள் பழுதடைந்ததால், பல பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது.கூடலுார் நகராட்சி சார்பில், ஹெலன் மற்றும் இரும்புபாலம் அருகே, பாண்டியார் - புன்னம்புழா ஆற்றை ஒட்டி, கிணறு அமைத்து, நான்கு ராட்சத மின் மோட்டார்கள் மூலம், 5 வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு நாள்தோறும், 13 லட்சம் லிட்டர் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, மூன்று மோட்டார்கள் பழுதடைந்து, குடிநீர் சப்ளை முழுமையாக பாதிக்கப்பட்டது.பழுதடைந்த மோட்டாரை நகராட்சி தலைவர் பரிமளா. துணை தலைவர் சிவராஜ், கமிஷனர் ராஜேஷ்வரன் மற்றும் கவுன்சிலர்கள் ஆகியோர் ஆய்வு செய்தனர்.நகராட்சி கமிஷனர் ராஜேஷ்வரன் கூறுகையில்,''பழுதடைந்த மின் மோட்டாரை விரைவாக சீரமைத்து குடிநீர் சப்ளை செய்யப்படும். அதுவரை, மக்கள் பாதிக்காத வகையில், வாகனங்கள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படும்,'' என்றார்.