சட்ட நடவடிக்கை;தீட்சிதர்கள் அறிவிப்பு
Added : மே 20, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

சிதம்பரம்:நடராஜர் கோவில் கனக சபையில் பக்தர்கள் ஏறி தரிசனம் செய்வதற்கு அனுமதித்தது தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, நடராஜர் கோவில் தீட்சிதர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் விடுத்துள்ள அறிக்கை;தமிழக அரசு 17ம் தேதி ஆணை பிறப்பிப்பதற்கு முன்பு உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கோவிலை நிர்வாகம் செய்து வரும் பொது தீட்சிதர்களிடம் கருத்து கேட்கவில்லை.கருத்து கேட்பதற்கு கூட்டப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் அரசாணையின் நகல் கோவில் தீட்சிதர்களுக்கு அரசு அதிகாரிகளால் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் ராஜேந்திர சிங் அரசு ஆணையை உடனே அமல்படுத்த வேண்டும். உங்கள் கருத்துக்களை கேட்பதற்கு அழைக்கவில்லை. அரசாணையை உடனே செயல்படுத்த வேண்டும் என்பதை தெரிவிக்கவே உங்களை அழைத்தோம்.அரசாணை நிறைவேற்றுவதில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என எச்சரித்தார்.
இதற்கு பொது தீட்சிதர்கள் கால அவகாசம் கேட்டும் தரவில்லை. நீதிமன்றத்துக்குச் சென்று எதிர் நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தனர். காவல்துறை அதிகாரிகள் எங்களது ஆட்சேபனையை மீறி, நடராஜர் சன்னதி உள்ள கனகசபையின் மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்துள்ளனர். இது சம்பந்தமாக உரிய சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட உள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X