நடராஜர் கோவில் கனகசபையில் தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி:இரண்டு ஆண்டு பிரச்னைக்கு முற்றுப் புள்ளி
Added : மே 20, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

சிதம்பரம்:அரசின் அதிரடி உத்தரவை தொடர்ந்து, சிதம்பரம் நடராஜர் கோவிலில் இரண்டு ஆண்டுகளுக்கு பின், கனகசபையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் உலக புகழ் பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. ஆகாய தலமாக விளங்கும் இக்கோவில், தில்லைவாழ் அந்தணர்கள் எனும் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.இங்கு, உருவமில்லா அபூர்வ தரிசனமான 'சிதம்பரம் ரகசியத்தை' நித்ய பூஜை செய்யும் தீட்சிதர், திரை விலக்கி பக்தர்களுக்கு காண்பிப்பார்.
2015ம் கும்பாபிஷேகத்திற்கு பின், கனகசபையின் மேல் ஏறும் பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் மட்டுமே காண்பிக்கப்படுகிறது. சிதம்பர ரகசிய தரிசனம் நிறுத்தப்பட்டது.அதை தொடர்ந்து, கொரோனா காரணமாக அரசு வழிகாட்டி நெறிமுறைகளின்படி, பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோது, கனகசபை மீது ஏறி நடராஜரை தரிசிக்கும் வாய்ப்பு தீட்சிதர்களால் நிறுத்தப்பட்டது.
கொரோனா பாதிப்பு குறைந்து, படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும், கனகசபை மேல் ஏற அனுமதி அளிக்கப்படவில்லை. இது தொடர்பாக, இரண்டு ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகள் மற்றும் பக்தர்கள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.இந்நிலையில், நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்தார்.
விசாரணை நடத்திய தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி பரதசக்கரவர்த்தி ஆகியோர், 'கனகசபையில் இருந்து, சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்கும் விவகாரத்தில், அரசே உரிய முடிவை எடுக்க வேண்டும்' என, ஏப்., 20ல் உத்தரவிட்டனர்.
அதில், மாவட்ட கலெக்டர், அறநிலையத் துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் ஆலோசித்து முடிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.இந்நிலையில், சிதம்பரம் கோவிலில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்து வந்த பழக்கத்தின் படியும், பக்தர்களின் கோரிக்கைகளை ஏற்றும், கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதித்து உத்தரவு பிறப்பிக்கலாம் என, அறநிலையத் துறை ஆணையர், அரசுக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து, கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கி, நேற்று முன்தினம் தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.அரசு உத்தரவை நடைமுறைப்படுத்தும் வகையில், நேற்று சிதம்பரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், கூடுதல் கலெக்டர் ரஞ்சித் சிங் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், 'கனகசபையில் ஏறி, பக்தர்கள் நடராஜரை வழிபட அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, பக்தர்களை அனுமதிக்க வேண்டும்' என, கூடுதல் கலெக்டர், தீட்சிதர்களிடம் தெரிவித்தார்.தீட்சிதர்கள், 'தமிழக அரசு பொது தீட்சிதர்களிடம் கருத்து கேட்கவில்லை. கால அவகாசம் வேண்டும்' என கேட்டனர். அதை ஏற்றுக்கொள்ளாத கூடுதல் கலெக்டர், 'அரசு உத்தரவை நிறைவேற்ற வேண்டும்; தடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
தொடர்ந்து, நேற்று மாலை 5:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டபோது, பக்தர்கள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் பரவசத்துடன் நடராஜரை தரிசனம் செய்தனர். இதனால், இரண்டாண்டு பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது.


 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X