பரமக்குடி, பரமக்குடி வட்டாரத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் 2022 --- 23 முகாம் நடந்தது.
இதில் கலையூர், கமுதக்குடி, பொதுவக்குடி, தென்பொதுவக்குடி, தோளூர், கீழப்பருத்தியூர், தினைக்குளம், ஏனாதிக்கோட்டை, எஸ்.காவனூர் மற்றும் ஊரக்குடி கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டன. கமுதக்குடி கிராமத்தில் நடமாடும் பரிசோதனை நிலையம் மூலம் மண் பரிசோதனை செய்யப்பட்டது. வட்டார உதவி இயக்குனர் ராஜேந்திரன் மண்வள அட்டை வழங்கினார். பரிசோதனை நிலைய அலுவலர் உமாதேவி மண்வள அட்டை குறித்து பேசினார்.
உதவி வேளாண் அலுவலர் ஈஸ்வரி, பிரியதர்ஷினி, உதவி தொழில்நுட்ப மேலாளர் ஆனந்த் கலந்து கொண்டனர். தொழில்நுட்ப மேலாளர் கோசலாதேவி நன்றி கூறினார்.