துவங்கியது தொல்லியல் கண்காட்சி:வரும் 29 வரை பார்க்கலாம்
Added : மே 20, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

கோவை:கோவையில் துவங்கியுள்ள, 'பொருநை' அகழ்வாராய்ச்சி கண்காட்சி மற்றும் ஓராண்டு சாதனை ஓவியப்படக்காட்சியை, வரும் 29ம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்.
தமிழக தொல்லியல் துறை சார்பில் கீழடி (வைகை நதிக்கரையில் நகர நாகரிகம்), பொருநை (ஆற்றங்கரை நாகரிகம்), கொடுமணல் (சங்க கால தொழிற் கூடம்), மயிலாடும்பாறை (4,200 ஆண்டுகள் பழமையான இரும்பு கால பண்பாடு) ஆகிய தொல்பொருட்கள் கண்காட்சி, செய்தி - மக்கள் தொடர்பு துறை சார்பில், தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க ஓவியப்பட கண்காட்சி, கோவை வ.உ.சி., மைதானத்தில், 10,000 சதுரடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்து, பார்வையிட்டார். வரும், 29ம் தேதி வரை, தினமும் காலை, 10.00 முதல் இரவு, 9.00 மணி வரை பார்வையிடலாம்; அனுமதி இலவசம். ஆதிச்சநல்லுார் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி, ஈமச்சடங்கு குழி, சிவகளை ஆய்வில் கண்டறியப்பட்ட ஈமத்தாழி, ஈமக்ககாடு போன்றவற்றை பார்க்கலாம். ஒன்பது அடுக்கு கொண்ட துளையிடப்பட்ட சுடுமண் குழாய்கள், செங்கல் கட்டுமானத்தில் கொள்கலன், ஈமப்பேழை, மூன்று கால் குடவை உள்ளிட்ட பல்வேறு தொல்லிய பொருட்கள் மற்றும் மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

சில அகழாய்வுகளில் எடுக்கப்பட்ட வான்வெளி படங்களும் வைக்கப்பட்டிருக்கின்றன. முதுமக்கள் தாழியில் உள்ள நெல்மணிகளின் காலம் கி.மு., 1155 என, கண்டறியப்பட்டுள்ளது. தண் பொருநை என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம், 3,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை, அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய தொன்மையான சமூகத்தின் நாகரிகத்தை பறைசாற்றும் அகழ்வாராய்ச்சி கண்டெடுப்புகளை பார்த்து ரசிக்கலாமே!


 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X