குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு திட்டம் ஒருங்கிணைப்பு:கலக்கத்தில் 724 பணியாளர்கள்
Added : மே 20, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

கோவை:குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு திட்டம், மத்திய அரசின் எஸ்.எஸ்.ஏ., திட்டத்துடன் இணைக்கப்படுவதாக, அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இத்திட்டத்தில் பணியாற்றி வந்த, 724 பேரின் குடும்ப எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
தேசிய குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு திட்டம் தமிழகத்தில், விருதுநகர், திண்டுக்கல் , திருப்பூர், கோவை, திருநெல்வேலி, சென்னை உட்பட, 15 மாவட்டங்களில் பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்தது. இத்திட்டம் வாயிலாக, குழந்தை தொழிலாளர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு குறுகிய, நீண்ட கால பயிற்சி வழங்கி, முறையான பள்ளிகளில் சேர்க்கப்படுவது வழக்கம்.

மாநிலம் முழுவதும், 213 சிறப்பு பள்ளிகள் செயல்பாட்டில் இருந்தன. கொரோனா காலத்தில் இம்மையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய, மாநில அரசு இத்திட்டத்திற்கான நிதி விடுவிப்பு செய்யவில்லை. பல மாதங்கள் ஊதியம் இன்றி இத்திட்டத்தின் கீழ், ஆசிரியர்கள், திட்ட இயக்குனர்கள், சமையலர், அலுவலக உதவியாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.

கடந்த மார்ச் 31ம் தேதியுடன் திட்டம் நிறுத்தப்பட்டு, பள்ளிக்கல்வித் துறையின் எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் இணைக்கப்படுவதாக, கடந்த மார்ச் 14ம் தேதி திடீரென்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தெளிவான அறிவிப்புகள் ஏதும் வெளியாகாததால், இத்திட்டத்தின் கீழ் பணிபுரிந்தவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, தேசிய குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு திட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் சங்க மாநில நிர்வாகி அழகுஜோதி கூறுகையில், ''ஏப்., 1ம் தேதி முதல் வேலையின்றி அனைவரும் வீட்டில் இருக்கின்றோம். நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. எஸ்.எஸ்.ஏ., திட்டத்துடன் இணைக்கப்படுவதாக மட்டும் கூறப்பட்டது.

பணிபுரிந்தவர்கள், படித்து வந்த மாணவர்களின் நிலை, உதவித்தொகை நிலுவை, எஸ்.எஸ்.ஏ., திட்டத்துடன் ஒருங்கிணைந்து எவ்வாறு செயல்படும் என்ற எவ்வித தெளிவும் அளிக்கப்பட வில்லை. ''பல ஆண்டுகள் இதில் பணிபுரிந்த, 724 பேரின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தெளிவான முடிவுகளை அறிவிக்க வேண்டும்,'' என்றார்.


 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X