பேரூர்:பேரூர், தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் கல்லூரியில், மனவளக்கலை மன்ற தவ மையம் துவக்க விழா நடந்தது.பேரூர், தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் கல்லூரியில், மனவளக்கலை மன்ற தவ மையம் துவக்க விழா, கல்லூரி அரங்கத்தில் நடந்தது.
இவ்விழாவிற்கு, உலக சமுதாய சேவா சங்க துணைத்தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் பங்கேற்று, மனவளக்கலை மன்ற தவ மையத்தை துவக்கி வைத்தார்.
இவ்விழாவில், பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் பேசுகையில், ''சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்கு நிலைகளை, நம் முன்னோர் வகுத்தனர். அவற்றுள் யோகம், சுய ஒழுக்கம், மன அமைதி ஆகியவற்றை உண்டாக்குவதாகும். எழுத்தறிவு, தொழில் அறிவு போல, ஒழுக்கம் கற்றுக்கொடுக்க யோகா பயிற்சி உதவுகிறது. இதன் மூலம் உலக அமைதி ஏற்பட, மனவளக்கலை பயிற்சி வழிகாட்டுகிறது," என்றார். கல்லூரி முதல்வர் சேதுராஜன், தவ மைய வளர்ச்சி கோவை அறக்கட்டளை நிர்வாகிகள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.