போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
Added : மே 20, 2022 | |
Advertisement
 
Latest district News

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.


கல்லுாரி வளாகத்தில் நடந்த கருத்தரங்கிற்கு, கல்வி நிறுவன நிர்வாக அலுவலரும், கல்லுாரியின் முதல்வருமான மோகனசுந்தர் தலைமை தாங்கினார். செயலாளர் கோவிந்தராஜூ முன்னிலை வகித்தார்.மாவட்ட மது ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் போதை பொருட்களால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்தும் அதனால் ஏற்படும் குடும்பச் சூழல் பாதிப்புகள் குறித்தும், இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மாணவர்களுக்கு உடல் நலத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கவுரையாற்றினர்.
மது ஒழிப்பு குறித்து சிறப்பாக பேசிய மாணவர்களுக்கு, ஏ.டி.எஸ்.பி., பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் டி.எஸ்.பி., ரவிச்சந்திரனின் படத்தை வரைந்த ஆங்கிலத்துறை மாணவர் திலீப்குமாருக்கு பரிசு வழங்கப்பட்டது.கல்லுாரி துணை முதல்வர் ஜான்விக்டர் நன்றி கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X