தண்ணீர் தொட்டியில் வழுக்கி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
தண்ணீர் தொட்டியில் வழுக்கி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு
Added : மே 20, 2022 | |
Advertisement
 

வடவள்ளி:வீட்டில் நள்ளிரவில் கழிப்பறைக்கு செல்லும் போது, தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த மூதாட்டி உயிரிழந்தார்.
வடவள்ளி, நடேச முதலியார் வீதியை சேர்ந்தவர் அருணாசலம். இவரது சித்தி மருதாத்தாள், 92. மருதாத்தாள், நேற்று முன்தினம் நள்ளிரவு, எழுந்து கழிப்பறைக்கு சென்றுள்ளார். அப்போது கால் வழுக்கி, அருகில் இருந்த சுமார், 10 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்துள்ளார்.

தொட்டியில் தண்ணீர் இருந்துள்ளது. வயது முதிர்வின் காரணமாக, எழ முடியாமல், நீரில் மூழ்கி, மூதாட்டி உயிரிழந்தார். நேற்று அதிகாலையில், அவரது சடலத்தைக் கண்ட உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X