கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில், மாவட்ட காங்., சார்பில் பேரறிவாளன் விடுதலை கண்டித்து அறவழிப் போராட்டம் நடந்தது.
சங்கராபுரம்
கடைவீதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில பொதுக்குழு உறுப்பிணர் துரைராஜ் தலைமை தாங்கினார். கல்வராயன்மலை வட்டார தலைவர் ராஜேந்திரன், இதயதுல்லா, சங்கராபுரம் வட்டார தலைவர் அப்துல் கலாம், நகர தலைவர் மண்ணாங்கட்டி முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், செல்வராஜ், கலியன், ஜெகதீசன், பாண்டியன், நடேசன், துரைசாமி, காத்தவராயன் உட்பட பலர் வாயில் துணி கட்டி பங்கேற்றனர்.
உளுந்துார்பேட்டை
பஸ் நிலையத்தில் ராஜிவ் சிலை அருகே நடந்த அறவழிப் போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். இளைஞர் காங்., மாவட்ட தலைவர்கள் மோகன்தாஸ், மாதேஸ்வரன், வட்டார தலைவர்கள் சீனிவாசன், காளிராஜன், முன்னாள் மாவட்ட தலைவர் இளையராஜா.நகர தலைவர் நல்ல குழந்தைவேல், மாவட்ட செயலாளர்கள் கோவிந்தராஜ், ராஜகோபால், சேவாதளம் மாவட்ட தலைவர் முருகன், எஸ்.சி., அணி மாவட்ட தலைவர் பெரியசாமி, வட்டார அணி விமல், மகளிரணி தலைவி அமுதா, நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.