வில்லியனுார், ஆத்துவாய்க்கால் பேட் முத்துமாரியம்மன் கோவில் திருப்பணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சிவா, ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கினார்.வில்லியனுார் தொகுதி ஆத்துவாய்க்கால் பேட் முத்துமாரியம்மன் கோவில் திருப்பணி, கடந்த இரண்டு ஆண்டுகளாக தடைபட்டது.கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, இக்கோவில் திருப்பணியை மீண்டும் துவக்க, எதிர்க்கட்சித் தலைவர் சிவா, தனது சார்பில் ரூ.1 லட்சம் நிதியை, கோவில் திருப்பணி கமிட்டி நிர்வாகிகளிடம் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் கிராம முக்கியஸ்தர்கள் கந்தன், சத்தியமூர்த்தி, ராமகிருஷ்ணன், காளி, சிலம்பரசன், மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் ராமசாமி, செல்வநாதன், மணிகண்டன், அக்பர், ரமணன், ரபீக், ராஜாமுகமது உள்ளிட்டோர் உடனிருந் தனர்.