கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்ட விளையாட்டு வீரர்கள், போட்டிகளில் பங்கேற்க ஆடுகளம் செயலியை பதிவேற்றம் செய்து பயன்படுத்த வேண்டும் என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
வரும் காலங்களில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்போர் மற்றும் வெற்றி பெறுவோருக்கான சான்றிதழ், இந்த செயலியில் பதிவு செய்தோருக்கு மட்டுமே டிஜி லாக்கர் மூலம் வழங்கப்பட உள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி, கல்லுாரி மாணவர்கள், விளையாட்டு சங்கங்கள், விளையாட்டு ஆர்வ முள்ள பொதுமக்கள் ஆடுகளம் செயலியை பதிவேற்றம் செய்து பயன்பெற வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.