விழுப்புரம், மே 20-
விழுப்புரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட 25 கிலோ பாலித்தீன் கேரி பேக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.விழுப்புரம் எம்.ஜி.ரோட்டில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் ரமணன், திண்ணாயிரமூர்த்தி நேற்று ஆய்வு செய்தனர்.அப்போது அங்குள்ள சில கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்கள், பாலித்தீன் கேரி பேக்குகள் என 25 கிலோ அளவில் பறிமுதல் செய்தனர். மேலும், கடை உரிமையாளர்களிடம் 6,000 ரூபாய் அபராதம் விதித்து, எச்சரித்தனர்.