வால்பாறை:வால்பாறை நகர், சோலையாறு டேம், ரொட்டிக்கடை ஆகிய இடங்களில் மதுக்கடைகள் செயல்படுகின்றன.
பெரும்பாலான எஸ்டேட்களில் மதுக்கடை இல்லாததால், வால்பாறை டாஸ்மாக் கடையிலிருந்து 'சரக்கு' வாங்கி சென்று, எஸ்டேட் பகுதியில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர்.குறிப்பாக, வால்பாறை நகரில் மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில், மது 'சில்லிங்' விற்பனை நடக்கிறது.
இதேபோல், வால்பாறையை சுற்றியுள்ள அனைத்து எஸ்டேட்களிலும், தொழிலாளர் குடியிருப்பு பகுதியிலேயே 'சில்லிங்' விற்பனை போலீசாரின் ஆதரவோடு நடக்கிறது. இதுகுறித்து, பெண் தொழிலாளர்கள்கூறியதாவது:தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் 'சில்லிங்' விற்பனை செய்யப்படுவதால், சிறுவர் முதல் பெரியவர் வரை, இரவு நேரத்தில் மதுகுடித்து போதையில் தகராறு செய்கின்றனர். இதை உள்ளூர் போலீசாரும் கண்டுகொள்வதில்லை. 'சில்லிங்' விற்பனையால் பல குடும்பங்கள் சீரழிந்து, வறுமையில் வாடுகின்றனர். இனியும் போலீசார் தாமதிக்காமல் எஸ்டேட் பகுதியில் விதிமுறையை மீறி 'சில்லிங்' விற்பனைசெய்வதை போலீசார் தடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.