இதேபோல் மறுமார்க்கத்தில், ஊட்டி - மேட்டுப்பாளையம் இடையே (எண்:06172) சிறப்பு ரயில், வெள்ளிக்கிழமைகளில் காலை, 11:25 மணிக்கு புறப்பட்டு, மாலை, 4:20 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடையும். இந்த ரயில் வரும், 27 முதல் ஜூலை 22 வரை இயக்கப்படும்.சிறப்பு ரயில், கல்லார், ஹில்குரோவ், குன்னுார், வெலிங்டன், அருவங்காடு, கேத்தி, லவ்டேல் ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.
மேலும், சுற்றுலா பயணிகளின் வசதிக்காக, ஊட்டி - கேத்தி இடையே தினமும் மூன்று சுற்றுவட்ட பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாரத்தில் வெள்ளி, சனி தவிர பிற நாட்களில், இந்த சுற்றுவட்ட பயணம், வரும் 22ம் தேதி முதல், ஜூலை, 21 வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.