மதுரை : மதுரையில் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில், இரு ரயில்வே சங்க நிர்வாகிகள் அடித்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இவ்விவகாரம் தொடர்பாக, ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில், இரண்டு சங்கங்களின் நிர்வாகிகளும் நேற்று அடிதடியில் ஈடுபட்டனர்; சிலருக்கு காயம் ஏற்பட்டது.இச்சம்பவத்திற்கு டி.ஆர்.இ.யூ., சங்கரநாராயணன் கண்டனம் தெரிவித்துள்ளார். மோதல் குறித்து விசாரணை நடத்த, ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.