ஈரோடு மாவட்டத்தில் அனைத்து தாலுகாவிலும் வரும், 24ம் தேதி முதல், 31 வரை வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நடக்க உள்ளது.
இதன்படி கொடுமுடி, மொடக்குறிச்சி, பவானி, ஈரோடு, நம்பியூர் தாலுகாவில் வரும், 24 முதல், 26ம் தேதி வரை நடக்கிறது. பவானி, ஈரோடு, நம்பியூர் தாலுகாவில், 24ம் தேதி முதல், 27 வரை; கோபி, சத்தி, பெருந்துறை தாலுகாவில், 24 முதல், 31ம் தேதி வரை (சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் மற்றும் திங்கள் கிழமை நீங்கலாக) ஜமாபந்தி நடக்கிறது. மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை, ஜமாபந்தி அலுவலரிடம் சமர்ப்பித்து நிவாரணம் பெறலாம்.