இடைப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு, புது செயல் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹிந்து சமய அறநிலையத்துறையில், செயல் அலுவலர் நிலை, 4ல் இருந்த, 13 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை, இடையார்பாளையம் பாலதண்டாயுதபாணி கோவில் செயல் அலுவலர் பதவி உயர்வில், சேலம் மாவட்டம், இடைப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோவிலு-க்கும்; திருச்செங்கோடு, வேலகவுண்டம்பட்டி மாரியம்மன் கோவிலில் பணியாற்றிய செந்தில்ராஜா, ராசிபுரம் ஆர்.புதுப்பட்டி துலுக்க சூடாமணியம்மன் கோவிலுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உள்பட, 13 பேருக்கு பதவி உயர்வு வழங்கி, கமிஷனர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல், 20 கண்காணிப்பாளர், மேலாளர் இடமாற்றப்பட்டுள்ளனர். அதன்படி, சமயபுரம் மாரியம்மன் கோவில் கண்காணிப்பாளர் சாந்தி, நாமக்கல் நரசிம்மர் கோவிலுக்கு மாற்றப்பட்டுள்ளார். பண்ணாரி மாரியம்மன் கோவிலில் பணியாற்றிய மகாவிஷ்ணு, திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கும், அங்கு பணியாற்றிய இந்திரா, திருப்பூர் இணை கமிஷனர் அலுவலகத்துக்கும் மேலாளராக மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் உள்பட, 20 பேர் மாற்றப்பட்டுள்ளனர்.