சேலம், சோனா தொழில்நுட்பக்கல்லுாரியில், 25ம் ஆண்டு விழா நடந்தது. அதில், கல்லுாரி தலைவர் வள்ளியப்பா தலைமை வகித்தார். துணைத்தலைவர்கள் சொக்கு, தியாகு முன்னிலை வகித்தனர். முதல்வர் செந்தில்குமார் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார்.
சென்னை இன்போசிஸ் நிறுவன இணை துணைத்தலைவர் சூரியநாராயணன், பெங்களூர் சி.ஐ.இ.எல்., டெக்ஸ்டைல்ஸ், லகுனா க்ளாதிங் நிறுவன நிர்வாக இயக்குனர் சர்பஜித் கோஸ் பேசினர்.
பல்வேறு பிரிவுகளில் சிறப்பிடம் பிடித்தவர்கள், சிறந்து விளங்கிய மாணவ, மாணவியருக்கு, துறை வாரியாக பரிசு, சன்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இதில், சோனா கல்வி குழும முதல்வர்கள் கார்த்திகேயன், காதர்நவாஷ், கவிதா, மதன்குமார், பேராசிரியர்கள், மாணவ மாணவியர் பங்கேற்றனர்.