பாலக்கோடு மற்றும் காரிமங்கலத்தில், தி.மு.க.,ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில், தி.மு.க., மேற்கு மாவட்ட பொறுப்பாளர் இன்பசேகரன் முன்னிலை வகித்தார். தலைமை கழக பேச்சாளர் கலமைணி பாரதி, பெரம்பலுார் விஜயரத்தினம் ஆகியோர், தி.மு.க., அரசின் ஓராண்டு சாதனை குறித்து பேசினர். நிகழ்ச்சியில் டவுன் பஞ்., சேர்மேன்கள் முரளி, மனோகரன், வெங்கடேசன் மற்றும் தி.மு.க., முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
* சூளகிரி ரவுண்டானா அருகில் மேற்கு மாவட்ட, தி.மு.க., சார்பில், தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் எம்.எல்.ஏ.,வுமான பிரகாஷ் தலைமை வகித்து பேசினார். ஓசூர் மாநகர மேயர் சத்யா, மாவட்ட துணைச்செயலாளர் முருகன், மாவட்ட பொருளாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல கிருஷ்ணகிரி ரவுண்டானாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., சார்பில், தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் தலைமை வகித்தார். முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.