அரசுப் பள்ளியில் படித்த மாணவ-மாணவியர், ௩௬ ஆண்டுகளுக்குப் பிறகு, சந்தித்து
கொண்டனர்.
அந்தியூரை அடுத்த மயிலம்பாடியில், அரசு உயர்நிலைப் பள்ளியில், 1984---85ல் படித்த மாணவ, மாணவியர் சந்திப்பு கூட்டம், முன்னாள் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியம் தலைமையில் நடந்தது. 36 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக் கொண்ட, 45 பேர் தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
முன்னாள் தலைமை ஆசிரியரான ஊராட்சிக்கோட்டையை சேர்ந்த சுப்பிரமணியத்துக்கு, 92, பாத பூஜை செய்து, காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டனர். பள்ளிக்கு, 75 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அலமாரி செய்து வழங்கினர். வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி கூறும்போது, தங்களை ஒன்றிணைத்த இறைவனுக்கு நன்றி என்றார். சந்திப்பில் பங்கேற்ற மாணவர்கள், பள்ளி கட்டடம், சுற்றுப்புறங்களை பார்த்து, அந்தக்கால நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர்.