அரவக்குறிச்சி டவுன் பஞ்.,க்குட்பட்ட பகுதிகளில், இரவு நேரங்களில் மின் கம்பங்களில் உள்ள தெருவிளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
புதுத்தெரு, தர்கா தெரு, கடைவீதி, ஜீவா நகர், பாவா நகர், அய்யாவு நகர் போன்ற பல பகுதிகளில், இரவு நேரங்களில் மின் கம்பங்களில் உள்ள தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. மேலும் இது போல நகரின் பல பகுதிகளிலும் தெருவிளக்கு எரியாமல் இருப்பதால், வெளியூர் வேலைக்கு சென்று விட்டு, இரவு நேரத்தில் வீடு திரும்புபவர்கள் சாலையில் உள்ள மேடு, பள்ளங்கள் தெரியாமல் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.
தெருக்களில் போதிய வெளிச்சம் இல்லாததால், இரவு நேரங்களில் பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் தெருக்களில் நடமாட அவதிப்படுகின்றனர். எனவே, அரவக்குறிச்சி டவுன் பஞ்., பகுதியில் ஆங்காங்கே எரியாத தெருவிளக்குகள் சீரமைக்கப்பட வேண்டும்.