அரவக்குறிச்சி தாலுகா அலுவலக வளாகத்தில் கழிப்பறையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
Added : மே 20, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

அரவக்குறிச்சி தாலுகா அலுவலக வளாக பகுதியில், பொது பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட கழிப்பறைகள் பராமரிப்பின்றி உள்ளதால் அங்கு வரும் மக்கள் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகின்றனர்.
இ-சேவை மையம், அரசு கருவூலம், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் தாலுகா அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. தினமும் அரவக்குறிச்சி தாலுகா பகுதியை சேர்ந்த நுாற்றுக்கணக்கான மக்கள் அலுவலக வேலை நிமித்தமாக அப்பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் அங்குள்ள கழிப்பறைக்கு தண்ணீர் வசதி மற்றும் மின்சார வசதி ஏதுமில்லை. கழிப்பறை பகுதி முழுவதும் சுகாதார கேடு நிலவுகிறது. அத்துடன் துர்நாற்றம் வீசுவதுடன் ஈ, கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி பரவி வருகின்றன. அரசு அலுவலகங்களுக்கு வரும் மக்கள் கழிப்பறைகளை பயன்படுத்த முடியாமல், வேறு வழியின்றி அங்குள்ள திறந்தவெளி பகுதியை பொது கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அங்கு தொற்றுவியாதி பரவும் நிலை உருவாகியுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் பயனில்லை. எனவே தாலுகா அலுவலக வளாகத்தில் சுகாதாரமற்ற நிலையில் உள்ள கழிவறைகளை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

 

Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X