கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தில், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் பிரபுசங்கர் ஆய்வு செய்தார்.
அப்போது, ஜமீன் ஆலமரத்துப்பட்டி பஞ்.,ல், ஆண்டிப்பட்டி காலனியில், பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில், பயன் பெற்ற, 5 பயனாளிகளின் வீடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், இதே கிராமத்தில், 1.39 லட்சம் மதிப்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மண் வரப்பு அமைத்தல் பணிகள், திட்டப் பதிவேடுகள் போன்றவற்றையும் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராச்சலம், உதவி செயற்பொறியாளர் பூர்ணாதேவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புவனேஸ்வரி, கிருஷ்ணமுர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.