நள்ளிரவில், அரசு நெல் கொள்முதல் மையத்தை, விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கூடமலையில், அரசின் நெல் கொள்முதல் மையம் செயல்பட்டு வருகிறது. விவசாயிகளிடம் வாங்காமல், வியாபாரிகளிடம் நெல் அதிகம் கொள்முதல் செய்வதாக ஏற்கனவே புகார் உள்ளது.
இந்நிலையில் நேற்றிரவு, 10:00 மணிக்கு மேல், வியாபாரிகளின் நெல் மூட்டைகளை எடை போட்டு கிடங்கில் அடுக்கி வைக்கும் பணியில், கொள்முதல் நிலைய ஊழியர்கள்
ஈடுபட்டுள்ளனர்.
இதையறிந்த, 50க்கும் மேற்பட்ட விவசாயிகள், இரவு 11:30 மணியளவில், நெல் கொள்முதல் மையத்தை முற்றுகையிட்டு அலுவலர்களுடன் வாக்குவாதம் செய்தனர். இதையறிந்து சென்ற கெங்கவல்லி போலீசார், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 'தாசில்தாரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து, 12:00 மணியளவில் விவசாயிகள் கலைந்து சென்றனர்.