கோடை மழைக்கு சாய்ந்த நெற்பயிர்: விவசாயிகள் நிவாரணம் எதிர்பார்ப்பு | சேலம் செய்திகள் | Dinamalar
கோடை மழைக்கு சாய்ந்த நெற்பயிர்: விவசாயிகள் நிவாரணம் எதிர்பார்ப்பு
Added : மே 20, 2022 | |
Advertisement
 


கோடை மழையால், அறுவடை நிலையில் உள்ள நெல், மக்காச்சோளம் உள்ளிட்டவை சேதமடைந்ததால், விவசாயிகள் நிவாரணத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சேலம் மாவட்டத்தில் நெல், மரவள்ளி, மக்காச்சோளம், பருத்தி, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். சில நாளாக காற்றுடன் கூடிய கோடை மழை பெய்ந்து வருவதால் பல்வேறு இடங்களில் வேரோடு மரங்கள் சாய்ந்தன. வாழை, கதிர் முற்றிய நெற்பயிர்கள் சாய்ந்தன.

தொடர்ந்து பெய்து வரும் மழையால், ஆத்துார் அருகே, கல்லாநத்தம், அம்மம்பாளையம், கல்பகனுார், ராமநாயக்கன்பாளையம், மணிவிழுந்தான், காட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில், 200 ஏக்கருக்கு மேல் உள்ள வயல்வெளியில் ஈரத்தன்மை இருப்பதால், சாய்ந்த நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தவிர, மக்காச்சோளம், எள் பயிரும் அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளது. வெற்றிலை கொடிகள் சாய்ந்து சேதமடைந்துள்ளன. அதனால், வருவாய் துறை மூலம் கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க, விவசாயிகள்
எதிர்பார்க்கின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X