திருவாரூர்: வலங்கைமான் அருகே, வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது, சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே, ஆலங்குடியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர், நேற்று முன்தினம் மாலை, வீடு கட்டுவதற்காக, ஜே.சி.பி., இயந்திரம் மூலம், தனக்கு சொந்தமான இடத்தில் பள்ளம் தோண்டினார்.
அப்போது, ஐம்பொன்னால் ஆன, 3 அடி உயரம் உள்ள பெருமாள் சிலை, 1 அடி உயரமுள்ள அப்பர் சிலை மற்றும் சிறிய சுவாமி சிலைகள், பூஜை பொருட்கள் கிடைத்தன.தகவலறிந்த, வலங்கைமான் தாசில்தார் சந்தானகோபாலகிருஷ்ணன், சிலைகளை ஆய்வு செய்து, அலுவலகத்தில் எடுத்து சென்று வைத்துள்ளார்.
தொல்லியல் துறை அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்த பின், வீடு கட்டும் பணியை தொடர, தாசில்தார் உத்தரவிட்டுள்ளார்.