56 வயது நபர் உடலில் இருந்து 206 சிறுநீரக கற்கள் அகற்றம்
Added : மே 20, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

ஹைதராபாத்: தெலுங்கானாவில், 56 வயது நபருக்கு நடந்த ஒரு மணி நேர அறுவை சிகிச்சையில், 206 சிறுநீரக கற்கள் அகற்றப்பட்டன.

தெலுங்கானாவின் ஹைதராபாத்தை சேர்ந்தவர் வீரமல்லா ராமலக்ஷ்மையா, 56. இவருக்கு கடந்த சில மாதங்களாக வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் கடுமையான வலி இருந்தது.தினசரி வேலைகளை கூட செய்ய முடியாத அளவுக்கு வலி அதிகரித்ததை தொடர்ந்து வீட்டருகே இருந்த டாக்டரை பார்த்தார்.அவர்கள் கொடுத்த மருந்தில் வலி குறையாததை அடுத்து, ஹைதராபாத்தின் பிரபல தனியார் மருத்துவமனையை அணுகினார். அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில், சிறுநீரகத்தில் ஏராளமான கற்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து ராமலக்ஷ்மையாவுக்கு, 'கீ ஹோல்' முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஒரு மணி நேர அறுவை சிகிச்சையில் 206 சிறுநீரக கற்களை டாக்டர்கள் அகற்றினர். தற்போது அவர் நலமுடன் உள்ளார்.

கோடை காலத்தில் நீர்சத்து குறைபாட்டினால், சிறுநீரக கற்கள் உருவாக அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்த டாக்டர்கள், அனைவரும் நிறைய குடிநீர் பருக அறிவுறுத்தினர்.

 

Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X