நாமக்கல்லில், தமிழ்நாடு டயர் ரீட்ரேடிங் உரிமையாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத்தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், கொரோனா தொற்றால் மோட்டார் தொழில் சரிவர இயங்காத இக்காலகட்டத்தில் ரீட்ரேடிங் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் ரப்பர் உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலை
கடுமையாக உயர்ந்துள்ளது. இதை கட்டுக்குள் கொண்டுவந்த, இத்தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சார்ந்துள்ள பல்லாயிரக்கணக்கான குடும்பங்களை காக்கும் வண்ணம், ரப்பர் உள்ளிட்ட மூலப் பொருட்கள் விலை குறைக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.
ரீட்ரேடிங் தொழிலுக்கு சிறுதொழில் அடிப்படையில் ஜி.எஸ்.டி., வரி விலக்கு அளிக்கவேண்டும். ரீட்ரேடிங் தொழிலின் கஷ்ட நிலைமையை உணர்ந்து, மின்கட்டணத்தில் சலுகை அளிக்க வேண்டும். நாமக்கல் நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, ரிங்ரோடு பணிகளை விரைவில் ஆரம்பிக்க வேண்டும் என்பது உள்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாநில பொருளாளர் சொக்கலிங்கம், மாவட்டத்
தலைவர் விமல்ராஜ், செயலாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.