சங்கடஹர சதுர்த்தி நாளையொட்டி, குமாரபாளையம் விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை, மகேஸ்வரர் கோவிலில் உள்ள கணபதிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. இதேபோல், கலைமகள் வீதி கற்பக விநாயகர் கோவில், அக்ரஹாரம் காசி விசுவேஸ்வரர் கோவில், கோட்டைமேடு கைலாசநாதர் கோவில், அங்காளம்மன் கோவில், சவுண்டம்மன் கோவில்கள், கள்ளிபாளையம் சிவன் கோவில், தேவூர் ஆத்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட, பல கோவில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
* ப.வேலுார்: ப.வேலுார், நன்செய் இடையார் மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள விநாயகருக்கு, சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். அதேபோல் ப.வேலுார் பஞ்சமுக விநாயகர், பேட்டை விநாயகர், பாண்டமங்கலம் விநாயகர், ஆனங்கூர் விநாயகர், அய்யம்பாளையம் விநாயகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கோவில்களில், நேற்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.