ப.வேலுார் தாலுகா பாண்டமங்கலம் டவுன் பஞ்.,சில் ஒருங்கிணைந்த துப்புரவு சிறப்பு முகாம் நடந்தது. பாண்டமங்கலம் டவுன் பஞ்., தலைவர் டாக்டர் சோமசேகர் தலைமை வகித்து, முகாமை துவக்கி வைத்தார்.
முகாமில் டவுன் பஞ்., துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டு, டவுன் பஞ்.,க்குட்பட்ட பகுதிகளில் முளைத்துள்ள செடி, கொடிகளையும், தெருக்களில் கிடைக்கும் பல்வேறு கழிவுகளையும், சாக்கடை கால்வாயில் கிடக்கும் பல்வேறு பொருட்களையும் அகற்றி, துப்புரவு பணி மேற்கொண்டனர். துப்புரவு பணியை, டவுன் பஞ்., தலைவர், துணைத்தலைவர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.