ப.வேலுாரில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது. இந்த வார ஏலத்திற்கு, 11 ஆயிரத்து, 165 கிலோ தேங்காய்கள் வரத்தாகின.
இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று, 26.50 ரூபாய், குறைந்தபட்சம், 20.20 ரூபாய், சராசரி, 24.60 ரூபாய் என ஏலம் போய், மொத்தம், 2.69 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. இதுவே கடந்த வாரம் நடந்த ஏலத்தில், 8,742 கிலோ தேங்காய், மொத்தம், 2.19 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய் விலை தொடர்ந்து சரிவடைந்து வருவதால், தென்னை விவசாயிகள் கவலை
அடைந்துள்ளனர்.