கூடலூர்: கூடலூர் அருகே, தாழ்வாக சென்ற மின்கம்பியில் சிக்கி காட்டு யானை உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் தேவர்சோலை அருகே உள்ள, வுட்பிராயார் தனியார் எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு ஐந்து யானைகள் இன்று, அதிகாலை வனப்பகுதி நோக்கி சென்றது. அங்குள்ள முருகன் கோவில் அருகே யானைகள் கடந்து சென்றபோது, கூட்டத்தில் இருந்த 40 வயது பெண் யானை தாழ்வாக சென்ற மின்கம்பியை பிடித்தபோது, மின்சாரம் தாக்கி துடிதுடித்து இறந்தது. காலை கோவிலுக்கு பூஜை செய்வதற்கு வந்த ஊழியர்ககள், யானை இறந்து கிடப்பதை பார்த்துள்ளனர். இது குறித்து, வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கூடலூர் டி.எப்.ஓ., கொம்மு ஓம்காரம், வனத்துறையினர் இறந்த யானையின் உடலை ஆய்வு செய்து, விசாரித்து வருகிறனர்.