கோவை:தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கல்லுாரி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி, ஜூன் 3ம் தேதி காலை 10:00 மணிக்கு, கோவை ராஜவீதி அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன கூட்ட அரங்கில் நடக்கிறது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ, மாணவியர், தாங்கள் படிக்கும் கல்லுாரி முதல்வரிடம் பரிந்துரைக்கடிதம் பெற்று வர வேண்டும்.ஒரு கல்லுாரியில் இருந்து, இரண்டு மாணவர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் இருந்து, முத்திரையிடப்பட்ட உறைகளில் அனுப்பி வைக்கப்படும் போட்டிக்கான தலைப்புகள், போட்டியின்போது நடுவர்களால் அறிவிக்கப்படும்.வெற்றி பெறும் மாணவர்களுக்கு, மாவட்ட அளவில் முதல் பரிசு 5 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசு 3 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். போட்டி நடக்கும் அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று, மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.